Monday, June 18, 2018

துத்திக் கீரை - மருத்துவ சிந்தனை

உணவிலும் மாற்றம்!!!
                உடலிலும் மாற்றம்!!!!

இன்றைய மருத்துவ சிந்தனை

துத்திக் கீரை

உடல் வலிகள் நீங்க
-----------------------------------------------------
துத்திக் கீரையைத் தண்ணீரில் போட்டு வேகவைத்தப் பிறகு அந்த தண்ணீரை வடிகட்டித் குளித்து வந்தால் உடல் வலிகள் நீங்கும்.

வெள்ளைப் படுதல் குணமாக
-----------------------------------------------------
துத்திக் கீரை (ஒரு கைப்பிடி ) எடுத்துக்கொண்டு அதனுடன் கடுக்காய் (ஒன்று) தட்டிப்போட்டு கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் வெள்ளைப் படுதல்  குணமாகும்.

ஆண்மைக் குறைவு நீங்க
-----------------------------------------------------
துத்திக் கீரை(ஒரு கைப்பிடி) எடுத்து அதனுடன் சிறிதளவு கற்கண்டு சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக் குறைவு நீங்கும்.

மூல நோய் குணமாக
-----------------------------------------------------
துத்திக் கீரைச் சாறு (அரை டம்ளர்) அளவு எடுத்து அதனுடன் பாதியளவு பசு மாட்டுப் பால் கலந்து  காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மூல நோய் குணமாகும்.

கை , கால் பிடிப்புகள் குணமாக
-----------------------------------------------------
சிறு துத்தி இலையை  எடுத்து அதனுடன் விளக்கெண்ணெய்யைச் சேர்த்து நன்றாக வதக்கி பிடிப்புகள் உள்ள பகுதியில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கை , கால் பிடிப்புகள்  குணமாகும்.

ஆசனவாய்க் கடுப்பு நீங்க
-----------------------------------------------------
துத்திக் கீரையைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்துச் சாறு (அரை டம்ளர் ) அளவு எடுத்து அதனுடன் சர்க்கரை மற்றும் பசும்பால் சேர்த்துக் குடித்து வந்தால் ஆசனவாய்க் கடுப்பு நீங்கும்.

KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com