முளைக்கட்டிய தானியங்களில் புதைந்திருக்கும் நன்மைகள்
முளைக்கட்டிய தானியங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?
இயற்கை உணவான தானியங்கள் புரதச்சத்தும் ஊட்டச்சத்தும் நிரம்பியது. அவற்றை முளை கட்டப்படுவதால் செரிமானப்பிரச்சனையை ஏற்படுத்தும் பைரேட்ஸ் என்ற சத்து குறைக்கப்படும், சிக்கலான ஸ்டார்ச்சுகள் உடைக்கப்பட்ட எளிதில் செரிமானம் ஆகிடும்.
இப்படி முளைக்கட்டிய தானியங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?
காய்கறி பழங்களை விட அதிக சத்து :
பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை விட அதிக அளவில் வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் அவசியமான கொழுப்பு ஆகியவை உள்ளன .இவை எடையைக் குறைக்கவும், செரிமானத்தை சீராக்கவும் உதவுகிறது. உடலில் உள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் மற்றும் கொழுப்புகளை வெளியேற்றுவதில் முளை கட்டிய தானியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
விட்டமின் :
முளை கட்டிய தானியங்களில், சாதாரண தானியங்களில் உள்ளதை விட 20 மடங்கு அதிகமான அளவில் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக வைட்டமின் ஏ, பி-காம்ப்ளக்ஸ், சி மற்றும் ஈ ஆகியவை அதிரிகரிக்கின்றன.
சரிவிகித உணவு :
தொடர்ந்து சரிவிகிதமான உணவை சாப்பிட முடியாத காரணத்தால், கொழுப்பை எரிக்கக் கூடிய அமினோ அமிலங்கள் போதிய அளவு உற்பத்தி ஆகாமல் இருப்பது இன்று பலரும் எதிர் கொள்ளும் உடல் ரீதியான பிரச்னையாகும். முளை கட்டிய தானியங்களை உட்கொள்வதால் உடலுக்கு அவசியமான அமினோ அமிலங்களை போதிய அளவில் சுரக்கச் செய்ய முடியும்.
எப்போதும் கிடைக்கக் கூடியது:
காய்கறி பழங்கள் போன்றவற்றில் சில அந்தந்த சீசன்களில் தான் கிடைக்கும். ஆனால் தானியங்கள் அப்படியல்ல அத்துடன் இந்த முளைகட்டிய பயிரை வீட்டிலேயே எளிதாக தயாரித்து விடலாம் அதிக செலவும் ஏற்படாது.
சாப்பிடும் நேரம் :
ஒரு நாளைக்கு எதாவது ஒரு வேளை முளைகட்டிய தானியங்களை எடுத்துக் கொள்ளலாம். பாதி உணவும், பாதி முளைகட்டிய தானியங்களும் இருக்குமாறு சாப்பிட்டால் நல்லது.
காலை நேரம் :
முளைகட்டிய தானியங்களை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது காலை உணவுடன் சேர்த்தே சாப்பிட வேண்டும். தானியங்கள் மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் முளைகட்டிய தானியங்களை வேக வைத்து சாப்பிடலாம் .
தனியாக உண்ணுதல் சரியா:
எந்த வேளையும் இந்த முளைகட்டிய தானியங்களை மட்டும் உணவாக சாப்பிடக்கூடாது. இதில் பல்வேறு சத்துக்கள் நிறைந்திருந்தாலும் நம் உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட்ஸ் மினரல்ஸ் போன்ற சத்துக்களும் தேவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
குழந்தைகள் :
சில சமயங்களில் முளைகட்டிய தானியங்கள் செரிமானக்கோளாறுகளை ஏற்படுத்தும் என்பதால் 5 வயதுக்குட்ப்பட்ட குழந்தைகளுக்கு வேகவைக்காமல் கொடுப்பதை தவிர்த்திடுங்கள்.
சுத்தம் :
முளைகட்ட வைக்க சுத்தமான நீரை பயன்படுத்துங்கள். கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும் முளைகட்டிய தானியங்கள் வாங்குவதை தவிர்த்திடுங்கள்.அதே போல தினமும் ஒரு வகையான தானியங்களை எடுப்பதற்கு பதிலாக ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான தானியங்களை எடுக்கலாம்.
*இயற்கையான முறையில் முளைகட்டி அரைத்த தரமான தமிழன் பாரம்பரிய சத்துமாவு கிடைக்கும்*
*45 வகையான பொருட்கள் சத்துமாவில் சேர்க்கப்பட்டுள்ளது*
*ஆறு மாத குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் பயன்படுத்தலாம்*
1 கிலோ ₹ 350
2 கிலோ ₹ 640
5 கிலோ ₹ 1500
10 கிலோ ₹ 1800
*இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்படும்*
*தமிழ்நாடு முழுவதும் இலவசமாக Delivery செய்யப்படும்*
*தேவைப்படும் நபர்கள் வங்கியில் பணம் செலுத்தி விட்டு WhatsApp எண்ணிற்கு முகவரி அனுப்பவும்*
*Whatsapp எண்* 04341256136
NAME. MADHAN
Acc No. 6025692830
BRANCH Mathur
IFSC. IDIB000M155
BANK. Indian Bank
தொடர்புக்கு
தமிழன் பாரம்பரிய சத்துமாவு
மத்தூர் கிராமம்
மத்தூர் அஞ்சல்
போச்சம்பள்ளி வட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண் 635203
Whatsapp OR Call
8300443153
04341256136
*மேலும் தமிழன் பாரம்பரிய சத்துமாவை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள Facebook Link ஐ Click செய்யவும்*
https://www.facebook.com/traditionaltamizhanhealthmix/
*தமிழ்நாடு முழுவதும் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும்*
*Join Telegram Group*
https://t.me/joinchat/FIZzZk-Xz0pCvOu9YFSDyw
*நண்பர்களுக்கு பகிரவும்*