Saturday, June 2, 2018

உணவிலும் மாற்றம்!!!
                உடலிலும் மாற்றம்!!!!
இன்றைய மருத்துவ சிந்தனை
கொய்யா இலை
உடல் எடை குறைய
----------------------------------------------------
கொய்யா இலையின் சாறு
(75 மில்லி) எடுத்து அதோடு தேன் கலந்து தினமும் காலை மாலை என இருவேளையும்  சாப்பிட்டு வந்தால் விரைவில் உங்கள் உங்கள் எடை குறையும்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த
-----------------------------------------------------
கொய்யா இலையை வெயிலில் காய வைத்தோ அல்லது பச்சையாகவோ நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ தயாரித்து, பின் அதை 12 வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயை குறைக்கலாம்.
வாய்ப்புண் , தொண்டைப் புண் குணமாக
-----------------------------------------------------
கொய்யா இலையை சாதாரணமாக வாயில் போட்டு மென்றும் அல்லது கொய்யா இலையில் டீ செய்து சாப்பிட்டு வந்தாலும், வாயில் ஏற்படும் பல் வலி, ஈறு பிரச்சனைகள். வாய்ப்புண் மற்றும் தொண்டைப் புண் ஆகியவற்றை உடனே சரி செய்கிறது.
அதிக உதிரப்போக்கு  நிற்க
-----------------------------------------------------
கொய்யா இலையில் கஷாயம்
(75 மில்லி) அளவுக்கு  தினந்தோறும் குடித்து வந்தால்,  அதிக உதிரப்போக்கு மற்றும் தைராய்டு சுரப்பு சமநிலைக்கு வரும்.
தீராத தலைவலி குணமாக
-----------------------------------------------------
கொய்யா இலையை (8) எடுத்து ஒன்றரை லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி தினமும் மூன்று முறை குடித்து வந்தால் தீராத வயிற்று வலி காணாமல் போய்விடும்.
கல்லீரல் சிறப்பாக இயங்க
-----------------------------------------------------
கொய்யா இலையில்  டீ போட்டு தினந்தோறும் குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகளை குறைத்து, நல்ல கொழுப்புகளை பராமரித்து கல்லீரலுக்கு சிறந்த டானிக்காக பயன்படுகிறது.
KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com