Saturday, June 2, 2018

உணவிலும் மாற்றம்!!!
                உடலிலும் மாற்றம்!!!!
இன்றைய மருத்துவ சிந்தனை
தென்னை
அதிக சிறுநீர் வெளியேறுவது மற்றும் சர்க்கரை நோய் நீங்க
----------------------------------------------------
இளந் தென்னங்காய் மட்டையை இடித்து பிழிந்த (100 மிலி)  அளவு சாறு எடுத்து நாள்தோறும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் அதிக சிறுநீர் கழிவது ,சர்க்கரை நோய் ,  வயிற்றுக்
கடுப்பு மற்றும் மூலம் அனைத்தும்  குணமாகும்.
வயிறு மற்றும் உடல் எரிச்சல் குணமாக
-----------------------------------------------------
தென்னை மரத்தின் இளங்குருத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து காலை மாலை  என இருவேளையும் குடித்துவந்தால் வயிறு மற்றும் உடல் எரிச்சல் குணமாகும்.
காது வலி குணமாக
-----------------------------------------------------
தென்னை மரத்தின் வேரை எடுத்து நன்றாக அரைத்து தேங்காய் எண்ணெய்யில் போட்டு சூடுபடுத்தி , அந்த எண்ணெய்யில் இரண்டு துளிகளைக் காதில் விட்டு வந்தால் காது வலி குணமாகும்.
சரும நோய்கள் அனைத்தும் குணமாக
-----------------------------------------------------
தேங்காய் , கஸ்தூரி மஞ்சள் இவை இரண்டையும் தலா 50 கிராம் எடுத்து அரைத்து உடல் முழுவதும் பூசிக் குளித்துவந்தால் சரும நோய்கள் அனைத்தும் தீரும்.
உடல் உறவில் ஆர்வம் அதிகரிக்க
-----------------------------------------------------
தென்னம்பாளை , சாலாமிசரி , ஜாதிக்காய் இவை அனைத்திலும் தலா 100 கிராம் எடுத்துப் பொடி செய்து  வைத்துக் கொண்டு தினமும் இரண்டு கிராம் அளவு பொடியை எடுத்து சுடுநீர் அல்லது பாலில் கலந்து குடித்து வந்தால் உடலுறவில் அதிக ஆர்வம் ஏற்படும்.உறவும் நீண்ட நேரம் நீடிக்கும்.
வாயுக்கோளாறுகள் அனைத்தும் விலக
-----------------------------------------------------
இளநீரில் ஒமத்தை ஊறவைத்து அதனை உலர்த்திப் பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும்சுடுநீரில் இரண்டு கிராம் பொடியைக் கலந்து குடித்து வந்தால் வாயுக்கோளாறுகள் அனைத்தும் விலகும்.
KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com