Saturday, June 2, 2018



தாமரை தண்டின் மருத்துவ குணம்..!!
தாமரைப்பூ போலவே தாமரை தண்டும் மருத்துவ குணம் மிக்கது. இதனை தாமரைக்கிழங்கு என்றும் சொல்வர். இதில் கலோரிகள் மிகவும் அதிகம். நார்ச்சத்து நிரம்பியவை. வைட்டமின் சி, வைட்டமின் பி 6 மற்றும் தாது உப்புகள் உள்ளன. தாமரையின் தண்டை பச்சையாகவும் சாப்பிடலாம். இதயத்தை வலுவாக்கும்.
தாமரை, எந்த தண்ணீரில் இருந்தாலும் மாசுபடுவதில்லை. அதைப்போல் சமைக்கும் போது உப்பு போட்டாலும் தாமரைத் தண்டில் உப்பு ஏறுவதில்லை.
காஷ்மீரில் தாமரைத் தண்டினை, 'நந்த்ரு" என்பர். மூலநோயை குணப்படுத்த இதை இலங்கையில் மருந்தாக பயன்படுத்துகின்றனர்.