Saturday, June 2, 2018

உணவிலும் மாற்றம்!!!
                உடலிலும் மாற்றம்!!!!
இன்றைய மருத்துவ சிந்தனை
கறிவேப்பிலை
வாயுக் கோளாறுகள் அனைத்தும் நீங்க
-----------------------------------------------------
கறிவேப்பிலையை (கால் கிலோ) உலர்த்திப் பொடி செய்து அதில் பெருங்காயத் தூள் (25 கிராம்) சேர்த்து , தினமும் உணவுக்குப் பிறகு இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் வாயுக் கோளாறுகள் அனைத்தும் நீங்கும்.
பெருவயிறு நீங்க
-----------------------------------------------------கறிவேப்பிலை , நிலாவரை இவை இரண்டையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடியாக்கி , தினமும் இரவு உணவுக்குப் பிறகு ஒரு ஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் பெரு வயிறு மறையும். மலச்சிக்கல் தீரும்.
சர்க்கரை நோயிலிருந்து விடுபட
-----------------------------------------------------
உலர்ந்த கறிவேப்பிலை , சுக்கு , மிளகு , சீரகம் , உப்பு - தலா 10 கிராம் எடுத்து பொடி செய்து தினமும் சூடான சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.
நரைமுடி மறைந்து கருப்பாக  வளர
----------------------------------------------------
கறிவேப்பிலையை அரைத்து சாறு எடுத்து ,  தேங்காய் எண்ணெய்யில் கலந்து தலைக்குத் தேய்த்துவந்தால் நரை முடி மறையும்.
கறிவேப்பிலையை அரைத்து முட்டையின் வெள்ளைக் கரு சேர்த்துக் குழைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் முடி கறுப்பாக வளரும்.
கறிவேப்பிலை , கரிசலாங்கண்ணிக் கீரை இவை  இரண்டையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடி செய்து , தினமும் காலை மாலை என இருவேளையும் ஐந்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் தலைமுடி கருமையாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
மூட்டு வலி , வாத வலிகள் நீங்க
-----------------------------------------------------
கறிவேப்பிலை , சுக்கு , வெந்தயம் , மஞ்சள் ஆகியவற்றை நன்றாக வறுத்துப் பொடியாக்கி , தினமும் காலை மாலை என இருவேளையும் உணவுக்குப் பிறகு ஐந்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி , வாத நோய்கள் குணமாகும்.
KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com