Saturday, June 2, 2018

விஷ்ணுக்கிரந்தி
அனைத்து வைரஸ் காய்ச்சலும் குணமாக
-----------------------------------------------------
விஷ்ணுக்கிரந்தி சமூலம், பற்படாகம், கண்டங்கத்திரி வேர், தூதுவளை ஆகியவற்றை தலா 30 கிராம் அளவுக்கு எடுத்து அவற்றை நன்றாக  சிதைத்து ஒரு  லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் சுண்ணக்  காய்ச்சிக் காலை, மாலை என இருவேளையும் 50 மி.லி. அளவுக்கு குடித்து வந்தால் விடாத காய்ச்சல்  குணமாகும்.
நரம்புத்தளர்ச்சி குணமாக
-----------------------------------------------------
விஷ்ணுக்கிரந்தியுடன் சீரகத்தைச் சேர்த்து அரைத்து பாலில் கலந்து இரவு வேளை  குடித்துவந்தால் நரம்புத்தளர்ச்சி குணமாகும்.
சளி , இருமல் , கோழைக்கட்டு நீங்க
-----------------------------------------------------
விஷ்ணுக்கிரந்தியுடன் சுக்கு , மிளகு , திப்பிலி இவை அனைத்தையும் சம அளவு சேர்த்துப் பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டுவந்தால் சளி , இருமல் , கோழைக்கட்டு போன்றவை குணமாகும்.
அஜீரணம் , கழிச்சலோடு காய்ச்சல் குணமாக
-----------------------------------------------------
விஷ்ணுக்கிரந்தியுடன் சம அளவு துளசி சேர்த்துக் கஷாயம் வைத்துக் குடித்து
வந்தால் அஜீரணம் மற்றும் கழிச்சலோடு கூடிய காய்ச்சல் போன்றவை குணமாகும்.
குழந்தைப்பேறு உண்டாக
----------------------------------------------------
விஷ்ணுக்கிரந்திப் பொடியை தினமும் இரண்டு கிராம் அளவுக்கு வெந்நீரில் கலந்து காலை வேளை மட்டும் குடித்து வந்தால் குழந்தைப்பேறு உண்டாகும்.
குறிப்பு :
இந்த மழைக்காலத்தில் ஏற்படும் காய்ச்சலை  விரட்டுவதில் முதன்மையானது விஷ்ணுகிராந்தி என்ற மூலிகை . இது நடைபாதை, வயல், வரப்பு உள்பட ஈரப்பதமுள்ள இடங்களில் கொடியாகப் படர்ந்து கிடக்கும் . சின்னஞ்சிறிய செடியான விஷ்ணு கிராந்திக்குள் இருக்கும் மருத்துவக்  குணங்கள் மலையளவு! விஸ்ணுகிராந்தியில் வெள்ளைப்பூ மற்றும் ஊதப்பூ என்ற இரண்டு வகைகள் இருக்கின்றன. பெரும்பாலும் இரண்டும் மருத்துவக்  குணங்களும் ஒன்றுதான்.
KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com