Saturday, June 2, 2018

வாழை
உடல் எடை குறைந்து உடல் அழகு பெற
-----------------------------------------------------
வாழைத்தண்டுச் சாறு (50 மி.லி) , பூசணிச் சாறு (50 மி.லி) ,அருகம்புல் சாறு (50 மி.லி) மூன்றையும் ஒன்றாகக் கலந்து ஒருநாள் விட்டு ஒருநாள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை குறைந்து உடல் அழகு பெறும்.
நீர்கடுப்பு குணமாக
-----------------------------------------------------
வாழைத்தண்டுச் சாறு (100 மி.லி) அளவு எடுத்து மண் சட்டியில் ஊற்றி சுடவைத்துக் குடித்து வந்தால் நீர்க்கடுப்பு குணமாகும்.
சிறுநீரகக் கோளாறுகள் குணமாக
----------------------------------------------------
வாழைத்தண்டு , பாசிப் பருப்பு இரண்டையும் சேர்ந்து வாரம் இருமுறை சமைத்துச் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கோளாறுகள் குணமாகும்.
வயிற்றுப் புண் குணமாக
-----------------------------------------------------
பிஞ்சு வாழைக்காயை உலர்த்திப் பொடி செய்து அதனை தினமும் அரை ஸ்பூன் அளவுக்கு காலை மாலை என இருவேளையும் சுடுநீரில் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப் புண் குணமாகும்.
இரத்தக் கடுப்பு , வெள்ளைப் படுதல் நீங்க
-----------------------------------------------------
வாழைப் பூவை இடித்து சாறு (50 மி.லி) எடுத்து அதில் பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்துவந்தால் பெண்களுக்கு ஏற்படும் ரத்தக் கடுப்பு , வெள்ளைப்படுதல் பிரச்சனையும் தீரும்.
வாயுத்தொல்லை நீங்க
-----------------------------------------------------
வாழைக்காயுடன் இஞ்சி , பூண்டு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் வாயுத்தொல்லை தீரும்.
KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com