Saturday, June 2, 2018

சோம்பு
மாதவிலக்கு கோளாறுகள் சரியாக
-----------------------------------------------------
சோம்பு , மாவிலங்கப்பட்டை , மிளகு இவை மூன்றையும் சம அளவு எடுத்து கஷாயமாகக் காய்ச்சி தினமும் 100 மி.லி அளவுக்கு காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மாதவிலக்கு கோளாறுகள் சரியாகும்.
வயிற்றுப் புழுக்கள் ஒழிய
-----------------------------------------------------
சோம்பு , வேப்பிலை , மிளகு இவை மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புழுக்கள் அனைத்தும் ஒழியும்.
கப நோய்கள் அனைத்தும் குணமாக
-----------------------------------------------------
சோம்பை  கற்பூரவள்ளிச் சாற்றில் ஊறவைத்து பின்பு சூரிய ஒளியில் காயவைத்துப் பொடி செய்து கொள்ளவும்.இவற்றை தினமும் இரண்டு கிராம் அளவில் தினமும் காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் சளி உள்ளிட்ட கப நோய்கள் அனைத்தும் குணமாகும்.
அனைத்துவிதமான வயிற்றுவலி தீர
-----------------------------------------------------
சோம்பு , வெந்தயம் இவை இரண்டையும் சம அளவு எடுத்து பொடி செய்து சாப்பிட்டு
வந்தால் அனைத்து விதமான வயிற்றுவலிகளும் தீரும்.
வெண் குஷ்டம் குணமாக
-----------------------------------------------------
சோம்பு , மிளகு , எள்ளு இவை மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து கொள்ளவும்.இதனை தினமும் காலையில் ஒரு ஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் வெண் குஷ்டம் மறையும்.
ஈரல் பாதிப்பு நீங்க
-----------------------------------------------------
சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடிசெய்து அதனுடன் தேன் கலந்து காலை மாலை என இருவேளையும் ஒரு டீஸ்பூன் அளவுக்கு  சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய் குணமாகும்.
KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com