Tuesday, June 12, 2018

மூங்கில் - மருத்துவ சிந்தனை


உணவிலும் மாற்றம்!!!
                உடலிலும் மாற்றம்!!!!
இன்றைய மருத்துவ சிந்தனை
மூங்கில்
தீராத வயிற்று வலி தீர
-----------------------------------------------------
மூங்கில் இலையில் சாறு எடுத்துக் (10மில்லி) குடித்து வந்தால் தீராத வயிற்று வலி தீரும். பிரசவத்திற்குப் பிறகு சூலகத்தில் உண்டாகும் அழுக்கையும் வெளியேற்றும்.
ஆண்மைக் குறைபாடு நீங்க
---------------------------------------------------மூங்கில் அரிசி , சாலாமிசிரி , கசகசா இவை மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் இருவேளை மூன்று கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும் .ஆண்மைக் குறைபாடும் தீரும்.
வயிற்றில் உள்ள புழுக்கள் அழிய
-----------------------------------------------------மூங்கில் இலைச் சாற்றில் ஒமத்தைச் சேர்த்து அரைத்து இரண்டு கிராம் அளவுக்குச்  சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் அழியும்.
பற்களின் கரை நீங்க
-----------------------------------------------------
மூங்கில் இலையை எரித்து , அந்தச் சாம்பலால் பல் துலக்கி வந்தால் பற்களில் கறை ஏற்படாது.
இரத்தம் சார்ந்த நோய்கள் குணமாக
-----------------------------------------------------மூங்கில் அரிசியைப் பாயாசம் அல்லது கஞ்சி செய்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சார்ந்த நோய்கள் , இடைவிடாத காய்ச்சல்  போன்றவை குணமாகும்.
உடல் வலுவாக அமைய
-----------------------------------------------------
மூங்கில் அரிசியை வெண் பொங்கல்போல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் வலு உண்டாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
சளி , இருமல் , இரைப்பு தணிய
-----------------------------------------------------மூங்கில் உப்பை தினமும் அரைகிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் சளி , இருமல் , இரைப்பு , காசநோய் போன்றவை தணியும்.
KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com