Saturday, June 2, 2018

உணவிலும் மாற்றம்!!!
                உடலிலும் மாற்றம்!!!!
இன்றைய மருத்துவ சிந்தனை
அவரை.
ஆண்மை விருத்தி உண்டாக
-----------------------------------------------------
அவரைக்காய் , மொச்சைக்கொட்டை , குடை மிளகாய் இவை மூன்றையும் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் ஆண்மை விருத்தி உண்டாகும்.
கண் நோய்கள் அனைத்தும் குணமாக
-----------------------------------------------------
அவரைப் பிஞ்சைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து அதனை48   நாள்களுக்குத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அனைத்து வகையான கண் நோய்களும் குணமாகும்.
நாள்பட்ட தலைவலி நீங்க
-----------------------------------------------------
அவரை இலையை அரைத்துத் தலையில் பூசிக் குளித்து வந்தால் நாள்பட்ட தலைவலி குணமாகும்.
சைனஸ் , தலைவலி , தலைப்பாரம் நீங்க
-----------------------------------------------------
அவரை இலைச் சாற்றை துணியில் நனைத்து  நெற்றியில் பற்றுப்போட்டுவந்தால் தலைவலி , தலைபாரம் , சைனஸ் போன்றவை குணமாகும்.
புண்கள் விரைவில் குணமாக
-----------------------------------------------------
அவரை இலைச் சாற்றுடன் , சுண்ணாம்பு , ஆமணக்கு எண்ணெய் இரண்டையும் சிறிதளவு  சேர்த்துக் குழைத்து புண்கள் மீது தடவினால் அவை விரைவில் ஆறும்.
தழும்புகள் , கரும்புள்ளிகள் மறைய
-----------------------------------------------------
அவரை இலைச் சாற்றை தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால் தழும்புகள் , கரும் புள்ளிகள் மறையும்.
KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com