Thursday, June 14, 2018

அத்தி மரம் - மருத்துவ சிந்தனை


உணவிலும் மாற்றம்!!!
                உடலிலும் மாற்றம்!!!!
இன்றைய மருத்துவ சிந்தனை
அத்தி மரம்.
கை , கால் வலிகள் , அல்சர்  நீங்க
-----------------------------------------------------
அத்திக்காயை வேகவைத்து சிறுபருப்பு சேர்த்துக் கடைந்து சாப்பிட்டு வந்தால் கை , கால் வலிகள் குணமாகும்.
அத்திக்காயை சிறு பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும்.
நரம்புத் தளர்ச்சி குணமாக
-----------------------------------------------------
அத்திப் பழத்தை கழுவி ஒரு நாளைக்கு இரண்டு பழம் என்ற அளவில் சாப்பிட்டுவந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
அத்தி இலை , வில்வ இலை இவை இரண்டையும் சம அளவு எடுத்து  பொடியாக்கி வைத்துக்கொண்டு காலை மாலை என இருவேளையும் இரண்டு கிராம் வீதம்  வெறும் வயிற்றில் குடித்து வரவும்.
மூட்டு வீக்கம் குணமாக
-----------------------------------------------------
அத்தி மரத்தில் இருந்து பால் எடுத்து வீங்கிய மூட்டுப் பகுதிகளில் தேய்த்துக்கொண்டு வந்தால் வீக்கம் குணமாகும்.
உடல் அரிப்பு நீங்க
-----------------------------------------------------
அத்திக்காயைத்  துவரம்பருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் உடல் அரிப்பு குணமாகும்.
சிறுநீரில் இரத்தம் கலந்து வருவது நிற்க
-----------------------------------------------------
அத்தி மரப்பட்டையை எடுத்து கஷாயம் வைத்துக் காலை மற்றும் மாலை வேளை குடித்து வந்தால் சிறுநீரில் இரத்தம் கலந்து வரவது நிற்கும்.

KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com