Tuesday, June 5, 2018

முளைக்கீரை - மருத்துவ சிந்தனை

உணவிலும் மாற்றம்!!!
                உடலிலும் மாற்றம்!!!!

இன்றைய மருத்துவ சிந்தனை

முளைக்கீரை

பசியின்மை நீங்கி நன்றாக பசி எடுக்க
-----------------------------------------------------
முளைக் கீரையுடன்  மிளகு , சீரகம் ,
பூண்டு ,சின்ன வெங்காயம் ,மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்துக்  கொதிக்க
வைத்து   அவற்றைச் சாப்பிட்டு வந்தால் பசியின்மை நீங்கி ,நன்றாகப் பசி எடுக்கும்.

நீர்க்கடுப்பு மறைய
-----------------------------------------------------
முளைக் கீரைச் சாறு (15 மி.லி) உளுந்து (சிறிதளவு)எடுத்து  ஊறவைத்து அரைத்துச் சாப்பிட்டு நீர்க்கடுப்பு மறையும்.

பௌத்திரம் , இரத்த மூலம் குணமாக
-----------------------------------------------------
முளைக் கீரை , துத்திக் கீரை இரண்டையும் சம அளவு எடுத்து சிறு பருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் உள் மூலம் , பௌத்திரக் கட்டி ,ரத்த மூலம் சரியாகும்.

குடல் புண்கள் குணமாக
-----------------------------------------------------
முளைக் கீரையுடன் சிறு பருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் குணமாகும்.

பித்த நோய்கள் , ரத்த அழுத்தம் குணமாக
-----------------------------------------------------
முளைக் கீரைச் சாற்றில் சீரகத்தை ஊறவைத்து ,உலர்த்திப் பொடி செய்து சாப்பிட்டு வந்தால் பித்த நோய்கள் ,மயக்கம் ,ரத்த அழுத்தம் போன்றவை குணமாகும்.

குழந்தைகள் உயரமாக வளர
-----------------------------------------------------
முளைக் கீரையைச் சமைத்து குழந்தைகளுக்கு தொடர்ந்து 40 நாட்களுக்கு கொடுத்து வந்தால் நல்ல உயரமாக வளருவார்கள்.

முகப்பரு , தேமல் மறைந்து முகம் பொலிவு பெற
-----------------------------------------------------
முளைக் கீரைச் சாற்றில் முந்திரிப் பருப்பூ ,மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு , தேமல் போன்றவை குறைந்து முகம் பொலிவு பெறும்.

KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com