Wednesday, June 20, 2018

செண்பகப் பூ - மருத்துவ சிந்தனை


உணவிலும் மாற்றம்!!!
                உடலிலும் மாற்றம்!!!!
இன்றைய மருத்துவ சிந்தனை
செண்பகப் பூ
உடல் பலம் பெற
-----------------------------------------------------
செண்பகப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து  அதனுடன் தேன் கலந்து தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.
நரம்புத் தளர்ச்சி குணமாக
-----------------------------------------------------
செண்பகப் பூவை கஷாயம் செய்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் நரம்புத் தளர்வு மற்றும் அதிக சூட்டினாலும், இரவு நேரங்களில் அதிக நேரம் கண் விழிப்பதாலும்  ஊண்டாகும் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
பித்த நீர் சுரப்பு குறைய
-----------------------------------------------------
செண்பகப் பூவை கஷாயம் செய்து அருந்தி வந்தால் பித்த நீர் சுரப்பு குறையும். பித்த அதிகரிப்பால் வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல் போன்ற உபாதைகளும் நீங்கும்.
ஆண்மைக் குறைவு நீங்க
----------------------------------------------------
செண்பகப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் ஆண்மைக் குறைவு நீங்கும்.
சிறுநீர் சார்ந்த பிரச்சனைக்குத் தீர்வு
-----------------------------------------------------
செண்பகப்பூ (10) எடுத்து 100 மில்லி தண்ணீரில் போட்டு நன்றாகக் காய்ச்சி 50 மி.லி அளவுக்கு காலை, மாலை என இருவேளையும் குடித்துவந்தால் வெள்ளைபடுதல் , வெட்டை, மேக நோய்கள், கணச்சூடு, நீர்சுருக்கு, சிறுநீர் சிவந்து எரிச்சலுடன் வெளிப்படுதல், போன்றவை குணமாகும்.
பாலியல் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர
-----------------------------------------------------
செண்பகப் பூவை காயவைத்து பொடி செய்து தினமும் இருவேளை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் பாலியல் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்கம் குறையும்.
பொடுகு , சொறி, சிரங்கு நீங்க
-----------------------------------------------------
செண்பக மொட்டு, கார்போகரிசி, வெந்தயம், அருகம்புல் ஆகியவற்றை இடித்து தேங்காய் எண்ணெயில் கலந்து சூரிய ஒளியில் 10 நாட்கள் வைத்திருக்க வேண்டும். பின்னர், அதை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு, சொறி, சிரங்கு போன்ற தொல்லைகள் தீரும்.
KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com