Saturday, June 2, 2018

மருதம் பட்டை
இதய பலவீனம் , இதய வீக்கம் குணமாக
-----------------------------------------------------
மருதம் பட்டை , ஆவாரம் பூ , தாமரைப் பூ , தான்றிக்காய்  இவை அனைத்திலும் தலா 50 கிராம் எடுத்து தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து காலையில்  வடிகட்டிக் குடித்து வந்தால் இதய நோய், இதய பலவீனம் , இதய வீக்கம் போன்றவை குணமாகும்.
சர்க்கரை நோய் கட்டுப்பட
-----------------------------------------------------
மருதம் பட்டை , அருகம் புல் , நாவல் பழக் கொட்டை , நெல்லி , கடுக்காய் , தான்றிக்காய் இவை அனைத்தையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு காலை மாலை என இருவேளையும் தலா 2 கிராம் வீதம்  சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
மருதம் பட்டை , கடல் அழிஞ்சில் பட்டை இவை இரண்டையும் சம அளவு எடுத்து  அரைத்து வைத்துக் கொண்டு காலை , மாலை என இரண்டு வேளையும்  தலா 2 கிராம் வீதம் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய்  கட்டுப்படும்.
குடல் புண் , வயிற்று வலி குணமாக
-----------------------------------------------------
மருதம் பட்டை , வில்வ பட்டை இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு காலை மாலை என இருவைளையும் தலா 2 கிராம் வீதம்  சாப்பிட்டுவந்தால் குடல் புண் , வயிற்று வலி போன்றவை குணமாகும்.
பல் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர
-----------------------------------------------------
மருதம் பட்டை , ஆலம் பட்டை , அரசம் பட்டை , கருவேலம் பட்டை , கொட்டைப் பாக்கு , கிராம்பு இவை அனைத்தையும் தலா 25 கிராம் எடுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு பல் துலக்கி வந்தால் பல் வலி , வாய் நாற்றம் , ஈறுகளில் ரத்தம் வடிதல் போன்ற குறைபாடுகள் தீரும்.
அதிக சிறுநீர் வெளியேறுவது நிற்க
-----------------------------------------------------மருதம் பட்டையைப் பொடி செய்து வைத்துக்கொண்டு  தினமும் 5 கிராம் அளவுக்கு எடுத்து காலை மற்றும் மாலை வேளையில் சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அதிகமாக வெளியேறுவது நிற்கும்.
அடிக்கடி உண்டாகும் காய்ச்சல்  குணமாக
-----------------------------------------------------மருதம் பட்டை (100கிராம்) , நிலவேம்பு (25கிராம்) இவை இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் அடிக்கடி காய்ச்சல் வராமல் தடுக்கலாம்.
KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com