Saturday, June 2, 2018

கொடிப் பசலைக் கீரை
நன்றாகத் தூக்கம் வர
-----------------------------------------------------
கொடிப் பசலைக் கீரையை நீரில் போட்டு அலசினால் கொழகொழப்பான திரவம் கிடைக்கும். இதை தலை அல்லது நெற்றியில் தடவி வந்தால் தலைவலி குணமாகும். நல்ல தூக்கமும் வரும்.
உயிரணுக்களின்  அதிகரிக்க
-----------------------------------------------------
கொடிப் பசலைக் கீரைச் சாறு
(200 மி.லி) எடுத்து அவற்றில் பாதாம் பருப்பு (100 கிராம்) ஊறவைத்து பின்பு ஊலர்த்திப் பொடியாக்கி  வைத்துக்கொண்டு தினமும் பசும் பாலில் ஒரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டு வந்தால் விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கட்டு குணமாக
-----------------------------------------------------
கொடிப் பசலைக் கீரைச் சாறு  ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அதில் சிறிது கற்கண்டு சேர்த்துக் கொடுத்து வந்தால்
குழந்தைகளுக்கு ஏற்படும் நீர்க்கட்டு குணமாகும்.
வீக்கம் , கட்டிகள் கரைய
-----------------------------------------------------
கொடிப் பசலைக் கீரையுடன் விளக்கெண்ணெய் , மஞ்சள் சேர்த்து வதக்கிக் கட்டினால், வீக்கம் , கட்டிகள் போன்றவை கரையும்.
மலச்சிக்கல் குணமாக
-----------------------------------------------------
கொடிப் பசலைக் கீரை
(ஒரு கைப்பிடி) கொத்தமல்லி விதை (1ஸ்பூன்) , சீரகம் (1 ஸ்பூன்) இவை மூன்றையும் சேர்த்துக்  கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
தீராத தாகம் தீர
-----------------------------------------------------
கொடிப் பசலைக் கீரை(3இலை)  எடுத்து சிறிது சீரகம் சேர்த்து  காலை மாலை என இருவேளையும் அரைத்துச் சாப்பிட்டு வந்தால்  தீராத தாகமும் தீரும்.
உடல் சூடு , வெள்ளைப்படுதல் குணமாக
----------------------------------------------------
கொடிப் பசலைக் கீரை
(ஒரு கைப்பிடி) எடுத்து உளுந்து ஊறவைத்த தண்ணீர் சேர்த்து அரைத்துக் காலை வேளையில்  குடித்து வந்தால் , உடல் சூடு , வெட்டைச் சூடு , வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும்.
KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com