உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
இன்றைய மருத்துவ சிந்தனை
புளி
மூட்டு வீக்கம் குணமாக
-----------------------------------------------------
புளி கரைத்த தண்ணீரில் புளிய இலையை சேர்த்து அரைத்து , அதனுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து குழைத்து கால் மற்றும் மூட்டுகளில் உள்ள வீக்கத்தின் மீது பற்றுப்போட்டு வந்தால் மூட்டு வீக்கம் குணமாகும்.
சளி மற்றும் நுரையீரல் கோளாறு நீங்க
-------------------------------------------------புளி , பூண்டு , மிளகு , தக்காளி , கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்து ரசமாக வைத்து சாப்பிட்டு வந்தால் சளி ,மற்றும் நுரையீரல் கோளாறுகளை உடனே குணப்படுத்தும்.
வீக்கம் , ரத்தக்கட்டு , சுளுக்கு குணமாக
-----------------------------------------------------
புளிக்கரைசலில் (30 மில்லி) , மஞ்சள், சர்க்கரை , உப்பு , மூன்றையும் தலா ஓரு ஸ்பூன் கலந்து சூடுபடுத்தி , வீக்கம் , ரத்தக்கட்டு , சுளுக்கு ஏற்பட்ட இடங்களில் தடவிவந்தால் இரண்டே நாள்களில் குணம் பெறலாம்.
டான்சில் (உள் நாக்கு) கரைய
-----------------------------------------------------
புளி , உப்பு இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து உள்நாக்கில் தடவி வந்தால் , உள்நாக்கு(டான்சில்) வளர்ச்சி கரைந்துவிடும்.
பல் வலி , தலை வலி நீங்க
----------------------------------------------------
புளிக்கரைசலில் உப்பைக் கரைத்து சூடு படுத்தி , அதில் வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி , தலைவலி போன்றவை குணமாகும்.
கட்டிகள் கரைய
-----------------------------------------------------
புளியங்கொட்டையை அரைத்து கட்டிகள் மீது வைத்துக் கட்டிவந்தால் , கட்டிகள் விரைவில் கரைந்துவிடும்.
KOVAI HERBAL CARE
VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609
Covaibala15@gmail.com