Tuesday, July 10, 2018

காய்கறிகளே மருந்து - கத்தரிக்காய்

இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை

காயமே (உடலே) மருத்துவர் !!
                         காய்கறிகளே மருந்து !!!

மண்டலம்       -      சிறுநீரக மண்டலம்

காய்.                -      கத்தரிக்காய்

பஞ்சபூதம்      -      நிலம்

மாதம்              -      வைகாசி

குணம்.            -     சகிப்புத்தன்மை

 சத்துக்கள்
 --------------------
விட்டமின்  B2 , C , B6 , தையமின் , நியசின் , மெக்னீசியம் , பாஸ்பரஸ் , காப்பர் , பொட்டாசியம் , மங்கனீசு , கால்சியம் , இரும்புச் சத்து , போலிக் ஆசிட் , நார்ச் சத்து

தலைப்பு  :   தலைவலி

அறிகுறிகள்
 தலைக்கு குளித்தால் உண்டாகும் தலை வலி

தீர்வு     
ஒரு கத்தரிக்காயை
(வரியுள்ள நாட்டு காய்)  எடுத்துக்கொண்டு  ஒரு 15 நிமிடம் வெதுவெதுப்பான  நீரில் ஊறப்போட்டு பின்பு எடுத்து நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன்  தக்காளி (1) , மிளகு(4) , கொஞ்சம் மஞ்சள் தூள் ,  சேர்த்து அனைத்தையும் நன்றாக அரைத்து வடிகட்டி  காலை மற்றும் மாலை என இருவேளையும்  குடித்து வரவும்.

(தேவைப்படுமெனில் உப்பு சேர்த்துக் கொள்ளவும்)

இரவு படுக்கப் போகும் முன்

 வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.