Tuesday, July 10, 2018

காய்கறிகளே மருந்து - கொத்தவரங்காய்

இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை

காயமே (உடலே) மருத்துவர் !!
                         காய்கறிகளே மருந்து !!!

மண்டலம்       -      நரம்பு மண்டலம்

காய்.                -      கொத்தவரங்காய்

பஞ்சபூதம்      -      காற்று

மாதம்              -      ஆனி

குணம்.            -     எளிமை

 சத்துக்கள்
 --------------------
 இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது.

தலைப்பு  :   தலைவலி

அறிகுறிகள்
எந்தவித காரணமில்லாமல் உண்டாகும் தலை வலி

தீர்வு     
கொத்தவரங்காய்யுடன்( 4) ஒரு அரை எலுமிச்சம்பழம் (தோலோடு) , இஞ்சி
 (1 துண்டு),  தக்காளி (1) ,   மிளகு (2) இவை அனைத்தையும் பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு  அதனுடன் தண்ணீர் அல்லது மோர் ஊற்றி  ஜூஸாக்கி அரைத்து தினந்தோறும் காலை  வேளையில்  குடித்து வரவும்.

(தேவைப்படுமெனில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்)

இரவு படுக்கப் போகும் முன்

 வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.