Tuesday, July 10, 2018

அல்லி - மருத்துவ சிந்தனை

உணவிலும் மாற்றம்!!!
                உடலிலும் மாற்றம்!!!!

இன்றைய மருத்துவ சிந்தனை

அல்லி

சர்க்கரை நோய் குணமாக
-----------------------------------------------------
அல்லிப் பூ , சரக்கொன்றைப் பூ , ஆவாரம் பூ இவை மூன்றையும்  சம அளவு எடுத்து கஷாயம் செய்து காலை மாலை என இருவேளையும் குடித்து வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.

புண்கள் விரைவில் குணமாக
-----------------------------------------------------
அல்லிப் பூவை புண்கள் மீது வைத்துக் அதன்மேல் துணிக் கொண்டு கட்டி வந்தால் புண்கள் விரைவில் ஆறும்.

உடல் சூடு தணிய
-----------------------------------------------------
அல்லிக் கொடியை எடுத்து தேங்காய் எண்ணெய்யில் போட்டுக் காய்ச்சி அதனை தைலம் போல் தயாரித்து வைத்துக் கொண்டு தினமும் தலையில் தேய்த்துக் கொண்டால் உடல் சூடு உடனே தணியும்.

பால்வினை நோய்கள் , மேக நோய்கள் குணமாக
-----------------------------------------------------
அல்லிப் பூவை உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு  தினமும் இரண்டு கிராம் அளவுக்கு எடுத்து காலை வேளையில் சுடு நீரில் கலந்து குடித்து வந்தால் பால்வினை நோய்கள் , மேக நோய்கள் போன்றவை குணமாகும்.

உடல்  சூடு ,  அதிக தாகம் விலக
-----------------------------------------------------
அல்லிக் கிழங்கை எடுத்து காயவைத்து பொடிசெய்து வைத்துக் கொண்டு தினமும்  இரவு இரண்டு கிராம் அளவு பாலில் கலந்து குடித்து வந்தால் உடல் சூடு , அதிக தாகம் போன்றவை விலகும்.

இரத்தம் சுத்தமாக
-----------------------------------------------------
செவ்வல்லியின் இதழ்களை காயவைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் காலை மாலை இருவேளையும்  கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்

கண் நோய்கள் நீங்க
-----------------------------------------------------
செவ்வல்லியின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து  வைத்துக் கொண்டு தினமும் இரண்டு கிராம் எடுத்து அதனுடன் தேன் கலந்து காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும்.

KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.